திருவாரூரில் வரும் 21 ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


திருவாரூரில் உலக புகழ்பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆழித் தேரோட்டம் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. 

சுமார் 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். 

300 டன் எடை கொண்ட இந்தத் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்வர். ஏழு அடுக்குகளைக் கொண்ட இந்தத் தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூரில் வருகிற 21 ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ உத்தரவுவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மது கடைகள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 21 tasmac close in thiruvarur for chariat function


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->