கல்லூரி மாணவன் ஓட்டி சென்ற கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது!! - Seithipunal
Seithipunal


கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் சென்னை நேப்பியர் பாலம் அருகே கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

 சென்னை மயிலாப்பூர் பகுதி சேர்ந்தவர் கல்யாணி. இவருடைய மகன் ரமணகரன் நேற்று பௌர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது காரின் இடது புற முன் டயர் திடீரென வெடித்துள்ளது.

 டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் குப்புற கவிழ்ந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் ஊதி விபத்துக்குள்ளானது. அவ்வைய சென்ற வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த கல்யாணி மற்றும் அவரது மகன் ரமணகரன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவல்துறை, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கல்லூரி மாணவன் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student drive the car accident


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->