தமிழக அரசின் மாதம் 1000 ரூபாய் திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுப் பள்ளியில் படித்து, பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படித்து, சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியன படிக்கும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று இருக்க வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று அதன்பின்பு 9 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இந்த நிதியுதவித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து பின்னா் முதல் முறையாக உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே திட்டம் பொருந்தும். 

ஐடிஐ., ஆசிரியா் பட்டயப் படிப்பு, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ, உள்பட அனைத்து கலை மற்றும் அறிவியல், 

கவின்கலை கல்லூரி பாடங்கள், பிஇ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., பி.எஸ்.சி., (வேளாண்மை), இளங்கலை கால்நடை அறிவியல், சட்டம், இணை மருத்துவப் படிப்புகள் (நா்சிங், பாா்மஸி, மெடிக்கல் லேப், பிசியோதெரபி) ஆகியன படிக்கும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு செல்வோரும் விண்ணப்பிக்கலாம். தொழில் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இறுதி ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களை கட்டணமில்லாத தொலைபேசி (14417) எண்ணை தொடா்பு கொண்டு பெறலாம். மாத உதவித் தொகை பெறும் திட்டத்துக்கென https://penkalvi.tn.gov.in/ என்ற புதிய இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். 

இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவுபெறவிருந்த, ஜூலை 10ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student 1000 rs


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->