மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி பேராசிரியர் - திருச்சியில் பயங்கரம்.!!
college professor arrested for harassment case in trichy
திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அமலாபுரம் காலனியை சேர்ந்த தமிழ் என்பவர் திருச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13-ந்தேதி அந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை, தனது அறைக்கு அழைத்து அவரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியது.
முதலில் அந்த மாணவி சம்பவம் குறித்து, கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் தெரிவித்தும், உரிய விசாரணை நடத்தாததால் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரை அடுத்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் தமிழை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத கல்லூரி துணை முதல்வர், வகுப்பு பேராசிரியர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
college professor arrested for harassment case in trichy