கல்லூரி கனவு திட்டம் ..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


அலமாதி எடப்பாளையத்தில் கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் ,

 திருவள்ளூர் மாவட்டம், அலமாதி எடப்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கனவு திட்டம் - 2025 கீழ் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்து பேசினார்.

இன்றைக்கு 3 ஆவது முறையாக இந்தாண்டிற்கான கல்லூரி கனவு முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கான மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் மற்றும் எல்லாபுரம் ஆகிய வட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்று வருகிறது.மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. 

என்ன படிப்பு படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால் சென்டர் உருவாக்க உள்ளோம். அதற்குரிய நம்பர் கொடுப்போம் பாடப் பிரிவுகளில் உங்களுக்குரிய அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த கால் சென்டரில் தீர்வு காணலாம். உங்களுக்கு உரிய சந்தேகங்களை ஆசிரியர்கள் கொண்ட வல்லுநர்கள் மூலம் தீர்வு காண்பதற்கு வழிவகை ஏற்பாடு செய்யப்படும். 

 எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதோ அந்தக் கல்லூரியில் உங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.  ஒரு மாணவன் குறைந்தபட்சம் மூன்று வெவ்வேறு பாடப்பிரிவுகளில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யுங்கள் அதற்கான உதவிகளை அலுவலர்கள் செய்து கொடுப்பார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை தமிழக அரசும். மாவட்ட நிர்வாகமும் செய்வதற்கு காத்திருக்கிறது. நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி வைக்கிறோம் நீங்கள் அனைவரும் உயர்கல்விக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து படிப்பை முடித்து வாழ்வில் அடுத்த உயர்ந்த நிலைக்கு முன்னேற வேண்டும். மேலும் மருத்துவக் கல்லூரிக்கான 7.5 உள் ஒதுக்கீடு தமிழக அரசு அறிவித்துள்ளது அந்த மருத்துவ படிப்பில் சேரலாம். 

நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி , சட்டக் கல்லூரி போன்ற கல்லூரியில் சேரலாம் உயர்கல்வி முடித்தவுடன் தொழில் தொடங்குவதற்கான திறன் பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி மையத்தில் வழங்கப்படும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார். பின்னர் மாணவர்கள் உயர் கல்விக்கு சேர்வதற்கான படிப்புகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இதில் பொன்னேரி சார் ஆட்சியர் கு. ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) மோகனா, சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, உதவி இயக்குநர் ரவீந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜா, கோஹன் கல்லூரி உதவி சேர்மன் . விஷ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) பவானி, உதவி திட்ட அலுவலர் பாலமுருகன் மாவட்ட கல்வி அலுவலர், கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

College Dream Project District Collector M. Prathap inaugurated it


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->