வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி மிரட்டும் திமுக நிர்வாகிகள் - அதிமுக வேட்பாளர் புகார்.! - Seithipunal
Seithipunal


திமுக நிர்வாகிகள் வெளியூர் ஆட்களை களமிறக்கி, தேர்தல் வாக்குசேகரிப்பு பணிகளில் ஈடுபட விடாமல் மிரட்டுவதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகேயிருக்கும் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, அதிமுக கட்சியின் சார்பில் சரோஜினி என்பவர் போட்டியிடுகிறார். 

அவர், அதிமுக நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், உள்ளூர் திமுக நிர்வாகிகள் வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, அதிமுக வேட்பாளருக்கு எதிராக வாக்கு சேகரித்து, அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க சென்றால் மிரட்டல் விடுத்து தடுத்து வருவதாக கூறப்படுகிறது. 

நேற்று முன்தினம் திவான்சாபுதூர் பகுதியில் அதிமுகவினர் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில், அங்கு வந்த திமுகவினர் வாக்கு சேகரிக்க விடாமல் ரகளை செய்து, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். 

மேலும், ஊராட்சி பணிகளில் இருக்கும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் திமுகவினருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக வேட்பாளர் சரோஜினி, ஆனைமலை ஒன்றிய அதிமுக செயலாளர் கார்த்திக், அப்புசாமி உட்பட பல நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Pollachi AIADMK Candidate Complaint Against DMK Supporters 2 Oct 2021


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal