#JustIN: சரக்கு கலந்து போதை ஐஸ்கிரீம் விற்பனை.. கோவையில் ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல்.! - Seithipunal
Seithipunal


மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் இருக்கும் பி.என் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிறுவனத்தில், போதை ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், காலாவதியான பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் தயார் செய்ய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. 

இந்த புகார் குறித்த தகவல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சீல் வைத்து மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று கோவை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டதில், ஐஸ்கிரீம் நிறுவனத்தில் இருந்து 2 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காலாவதியான ஐஸ்கிரீம் உற்பத்தி பொருட்களும் கண்டறியப்பட்டது.

மேலும், ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமமும் அதிரடியாக இரத்து செய்து உத்தரவிடப்பட்டு, கடைக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore PN Palayam Ice Cream Liquor Drug Content Company Sealed by Officers


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->