பணமோசடி புகார்.. முன்னாள் எம்.எல்.ஏவின் மருமகனை தூக்கிய காவல்துறை.. சிறையில் அடைப்பு.! - Seithipunal
Seithipunal


பணமோசடி புகாரில் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி லே அவுட் பகுதியை சார்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 41). இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் மருமகன் ஆவார். கோவை தங்கம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டப்பேரவைக்கு வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், பின்னாளில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அருண் பிரகாஷ் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் உணவகம், தொழிற்சாலைகளை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அருண் பிரகாஷும் - பீளமேடு சித்ரா அவென்யூ பகுதியை சார்ந்த சிந்துஜா என்பவரும் சேர்ந்து புதிய தொழில் தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த விஷயத்தை சிந்துஜா தனது தந்தை செங்குட்டுவனிடம் தெரிவிக்கவே, அவரும் அருணை நம்பி ரூ.ஒன்றரை கோடி முதலீடு செய்ய பணம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட அருண் பிரகாஷ் தொழிலை தொடங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், பணத்தை கேட்ட போது வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்டை விற்பனை சையது பணம் தருவதாக கூறியுள்ளார். மேலும், 2 காசோலையும் கொடுத்த நிலையில், காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதனையடுத்து, அருண் பிரகாஷின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் சிந்துஜா மற்றும் செங்குட்டுவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் அருண் பிரகாஷின் மீது மோசடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, விசாரணைக்கு பின்னர் நேற்று அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவருக்கு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவிநாசியில் உள்ள கிளை சிறையில் அருண் பிரகாஷ் அடைக்கப்பட்டார். சிந்துஜா ஏற்கனவே அருண் பிரகாஷின் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரில், "கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் தன்னிடம் உணவகம் தொடங்கலாம் என கூறி ரூ.7 கோடி பணம் வாங்கிய அருண் பிரகாஷ், தன்னை ஏமாற்றிவிட்டார். அவரிடம் பணத்தை கேட்கையில் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்தார்" என்றும் தெரிவித்து இருந்தார். இந்த புகாரில் கைது செய்யப்பட்ட அருண் பிரகாஷ், ஜாமின் பெற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே சுற்றி வந்த நிலையில், சிந்துஜாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Ex MLA Thangam Nephew Arun Prakash Arrested by Police about Money Forgery Case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->