சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்; கம்போடியா நபர் கைது..!
Cocaine worth Rs 35 crore seized at Chennai airport
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது பயணி ஒருவரின் உடைமைகளில், கோகைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.35 கோடி என கூறபடுகிறது. இதையடுத்து குறித்த பயணியை சுங்கத்துறையினர் கைது செய்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Cocaine worth Rs 35 crore seized at Chennai airport