தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்: முதலமைச்சர் விஜய் வீரவணக்கம்! - Seithipunal
Seithipunal


தியாகி சங்கரலிங்கனாரது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (வலைதளப்) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீரவணக்கப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

நமது மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து, அறவழியில் 76 நாட்கள் உறுதியான உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரைத் தியாகம் செய்த ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

தனது கொள்கையிலும், தமிழ் மண்ணின் தன்னாட்சிப் பெருமையிலும் எள்ளளவும் விட்டுக்கொடுக்காமல், உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது இணையற்ற உயிர்த்தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டின் தனித்துவத்தையும், தமிழர் உரிமையையும் காக்க தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கொண்ட உறுதியும், அவரின் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும் என்று முதலமைச்சர் விஜய் தனது பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay Pays Tributes to Thyagi Sankaralinganar on His Memorial Day


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




சினிமா

Seithipunal
--> -->