ராகுல் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு தலைமை நீதிபதி அனுமதி மறுப்பு: எம்பிக்கள் கடும் அதிருப்தி! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது மற்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து முறையிட, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தை சந்திக்க அனுமதி கோரியிருந்தனர். ஆனால், இந்த சந்திப்பு கோரிக்கையைத் தலைமை நீதிபதி நிராகரித்தார்.

இதற்குச் சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், "அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி எங்களைச் சந்திக்க விரும்பவில்லை. வாக்குத் திருட்டு மற்றும் வாக்காளர் பெயர் நீக்கம் ஆகியவற்றால் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது; தலைமை நீதிபதியின் இந்த முடிவை நாட்டு மக்கள் நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்" எனக் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸின் இம்ரான் மசூத் கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என்றார்.

தி.மு.க முன்னாள் எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்பதே எங்கள் புகார். தலைமை நீதிபதிக்கு என்ன அழுத்தம் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஞானேஷ் குமாருக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களும் ஜனநாயகத்திற்கு எதிரானவர்களே" என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே, சந்திப்பு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், எதற்காகச் சந்திக்க இயலாது என்பதற்கான காரணத்தைக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாகக் கூறினார். மேலும், "சாதாரணக் குடிமகனோ அல்லது மக்கள் பிரதிநிதியோ, சட்டரீதியான தீர்வுகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன; அனைவரும் நீதிமன்றத்தை அணுக முழு உரிமை உண்டு" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDIA Alliance Leaders Express Dissatisfaction Over Chief Justices Refusal to Meet


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->