தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி! - Seithipunal
Seithipunal


தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனாரின் நினைவு நாள் இதுவாகும். வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம், ஆனால் ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறு விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இறுதியில் அவர் தன் உயிரைத் துறந்தார். அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், திமுக ஆட்சி அமையும் வரை காலம் கனிந்தது. அதன்பின்னர் கழகம் வென்றது, அண்ணா வந்தLர், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதன் மூலம் தமிழ்நாடு தமிழ்நாடானது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பெயர் சூட்டுதலில் பலரின் போராட்டங்களும், தியாகங்களும், திமுகவின் சளைக்காத முயற்சிகளும் அடங்கியுள்ளன. இருப்பினும், இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், 'தமிழ்நாடு' என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்கும் வரை சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது, தமிழ்நாடு வாழ்க என தனது பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin Pays Tributes to Thyagi Sankaralinganar on His Memorial Day


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->