ஆசிய பாரா விளையாட்டு; தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை; முதல்வர் விஜய்அறிவிப்பு ..! - Seithipunal
Seithipunal


ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகைகை  முதல்வவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆடவர் நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீரர் சோலைராஜ் தர்மராஜுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

திறமையும், உறுதியும் இருந்தால் எத்தகைய சவால்களையும் கடந்து சாதிக்க முடியும் என்பதற்கு அவரது இம்மகத்தான வெற்றி சான்றாகத் திகழ்வதோடு, தமிழகத்தின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையும், ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அமைந்துள்ளது.

எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay announces a cash incentive of Rs 75 lakh for Tamil Nadu athlete Solairaj who won a gold medal at the Asian Para Games


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->