எல். முருகன் ராஜினாமாவை தொடர்ந்து அந்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-இல் இடைத்தேர்தல்; அக்.26 முதல் நவ.02 வரை வேட்புமனு தாக்கல்..! - Seithipunal
Seithipunal


எல்.முருகன் தனது எம்.பி பதவியை ராஜினமா செய்ததை அடுத்து, அந்த இடத்துக்கான தேர்தல் நவ. 12-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்​தியப் பிரதேச மாநிலத்​தில் இருந்து மாநிலங்​களவை உறுப்பின​ராகத் தேர்வு செய்​யப்​பட்​டவர் எல்.முருகன், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி மீன்​வளம், கால்​நடை பராமரிப்பு மற்​றும் பால்​வளத்துறை, தகவல் மற்​றும் ஒலிபரப்​புத் துறை ஆகிய​வற்​றின் இணை அமைச்​ச​ராக பொறுப்​பேற்​றார்.

அதனைத் தொடர்ந்​து, 2024-ஆம் ஆண்​டிலும் மத்​திய பிரதேசத்​தில் இருந்து மாநிலங்​களவை உறுப்​பின​ராகத் தேர்வு செய்​யப்​பட்ட எல்.முருகனின் பதவிக்காலம், வரும் ஏப்ரல் 2, 2030 வரை உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த 14-ஆம் தேதி மத்திய இணை அமைச்​ச​ர் பதவியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் திடீரென விலகினார்.

அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புவதாக தனது ராஜினாமா கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.

எல்.முருகன் ராஜினாமா செய்ததை அடுத்து காலியான மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்.26 முதல் நவ.02 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், நவ.03-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்றும், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நவ.05 வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்  கூறப்பட்டுள்ளது. அடுத்து, நவ. 12-ஆம் தேதி காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே மாலை 05 மணிக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

By election for the Rajya Sabha seat vacated by L Murugan to be held on Nov 12


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->