''திருக்குறள் பயில்வோம்'' தலைப்பில் காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வு; நவ.28 முதல் டிச.12 வரை நடைபெறும்..! - Seithipunal
Seithipunal


காசி தமிழ் சங்கமம் 5.0 வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது. 'திருக்குறள் பயில்வோம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்வுக்கான இணையதளப் பதிவை மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''05-வது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கான இணையதளப் பதிவை மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார். இந்தக் காசி தமிழ்ச் சங்கமம் 2026 நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.

பழமையான கல்வி மையங்களான காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையேயான தொன்மைமிக்க நாகரிகத் தொடர்புகளை கொண்டாடும் வகையிலும், அவற்றை உறுதிப்படுத்தி வலுப்படுத்தும் வகையிலும் இந்நிகழ்வு அமையும்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையதள தொடக்க விழாவில் பேசிய பிரஹலாத் ஜோஷி கூறியதாவது;

நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே வலுவான கலாச்சார ஒற்றுமை நிலவி வருகிறது. மக்கள் தங்களுடைய சமய மரபுகளின் ஒரு பகுதியாக காசி, ராமேஸ்வரம் பயணிப்பது நாட்டின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய கலாச்சார தொடர்புகளைப் பிரதிபலிக்கிறதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், தொழில் நிபுணர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பெண்கள், ஆன்மீக அறிஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் என்றும், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வின் நோக்கங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் உயர்க்கல்வி நிறுவனங்களில் பல்வேறு கல்விசார் விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், இந்தியாவின் பொதுவான நாகரீகப் பாரம்பரியத்தை கொண்டாடுவதிலும் காசி தமிழ்ச் சங்கமம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்வை, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை சென்னை ஐஐடி, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஜோஷி, அறநெறி, ஒழுக்கம் சார்ந்த மாண்புகளைக் கொண்ட செவ்வியல் தமிழ் நூலான திருக்குறளை நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், கற்பவர்களுக்கும் மேலும் அறிமுகப்படுத்தும் வகையில் 'திருக்குறள் பயில்வோம்' என்ற தலைப்பில் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கம் 5.0 நிகழ்வு நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.

இணையதளப் பதிவு 2026 அக்டோபர் 22 அன்று தொடங்கி 2026 நவம்பர 13 அன்று நிறைவடைகிறது. வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தியா ஆகிய இடங்களில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஒரு குழுவுக்கு தலா 200 பேர் வீதம் 07 குழுக்கள் பங்கேற்கின்றன என மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Kashi Tamil Sangamam event will be held from Nov 28 to Dec 12


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->