ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா; 'ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரம்'; முதல்வர் விஜய் புகழ் வணக்கங்கள்...!
CM Vijay tributes and homage on the occasion of the 1041st Sadaya Festival of Rajaraja Cholan
''ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை.'' என முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டிடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும். தமிழர் பெருமையைப் போற்றுவோம். தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Vijay tributes and homage on the occasion of the 1041st Sadaya Festival of Rajaraja Cholan