காணொளி வாயிலாக இண்டியா கூட்டணி அவசர ஆலோசனை; ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்துக்கான வியூகம்; தவெக பங்கேற்பு..? - Seithipunal
Seithipunal


தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டத்தில் வியூகம் அமைப்பது தொடர்பாக இண்டியா கூட்டணி இன்று மாலை காணொளி வாயிலாக அவசர ஆலோசனை நடத்துகிறது. 

வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

 கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இண்டியா கூட்டணித் தலைவர்களைத் தனது இல்லத்துக்குத் தேநீர் விருந்து கொடுத்தார். அப்போது வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தைத் தொடரவும், இந்த விவகாரத்தில் நீதியைப் பெறும் வரை தொடர்ந்து போராடவும் எதிர்க்கட்சிகள் உறுதியளித்தன.

இந்நிலையில், ஞானேஷ் குமாரை எதிர்க்கும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வியூகத்தை வகுக்கும் வகையில் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகிக்க உள்ளார். இந்தக் கூட்டத்தில், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகல் வலியுறுத்தல் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அத்துடன், வரும் நவம்பர் 1-ந் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில் தமிழ்நாட்டிலும் சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு கூட்டத்தில், முதன்முறையாக ஆளும் கட்சியான தவெக சார்பில் அதன் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதன் காரணமாக, தவெகவும் இண்டியா கூட்டணியில் இணைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இதையடுத்து காணொளியில் நடைபெறவிருக்கும் இண்டியா கூட்டணியின் தவெக கலந்து கொள்ளுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDIA bloc holds urgent consultation via video conference regarding strategy for protests against Gyanesh Kumar


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->