#BIgBreaking | சீர்காழி புறப்படும் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


122 ஆண்டு காலத்தில் இல்லாத, வரலாறு காணாத மழை-வெள்ள பாதிப்பு மற்றும் தொடர் கனமழை காரணமாக வெள்ள நீரில் சீர்காழி மிதந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது நாளாக இன்றும் சீர்காழியில் மழை நீர் வடியாத நிலையில் உள்ளது.

ஒரே நாளில் 44 செ.மீட்டர் கொட்டித் தீர்த்த மழை காரணமாக இன்றும் சீர்காழியில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், சீர்காழியில் மழை வெல்ல பாதிப்புகளை பார்வையிட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், முன்னறிப்பு  : 

தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய மட்டுமே வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில் தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 16ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Visit Sirkazhi Rain Flood


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->