மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.!! - Seithipunal
Seithipunal


மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சரோஜா  என்பவரின் வீட்டுக்கு சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மருந்துகளை வழங்கினார். அதையடுத்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சந்திரசேகரன் என்பவர் வீட்டிற்கு சென்று மருந்து பொருட்களை வழங்கினார். 

முகவூர் பகுதியை சேர்ந்த கால்களை இழந்த இருவருக்கு செயற்கை கால்களையும், சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸ் செய்யவும் வாங்கினார். நோயாளிகளின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு மருந்து அளிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட மருத்துவ வாகனத்தில் வீடு தேடி சென்று சிகிச்சை அளிப்பார்கள். நாள்பட்ட நோய்களான புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm stalin started medicines in home


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->