திராவிடக் கட்டடக்கலையின் உச்சம், சோழ மன்னர்களின் பெருமை - ஸ்டாலின் போட்ட டிவிட்!
Cm stalin say about chozha and dravidian
டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் விதமாகவும், மகளிர் ஆற்றலை மையப்படுத்தியும் திராவிடக் கட்டடக்கலையின் உச்சத்தையும் சோழ மன்னர்களின் பெருமையையும் உலகறியும் வண்ணமும், டெல்லியில் இந்த ஆண்டு குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெற்றது.

அவ்வை, வீரமங்கை வேலுநாச்சியார், இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதநாட்டியப் பேரொளி பால சரஸ்வதி, சமூக சீர்திருத்தப் போராளிகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி, 107 வயது வாழும் விவசாயி பாப்பம்மாள் ஆகியோரின் உருவச்சிலையுடன் கம்பீரமாக சென்றது நமது ஊர்தி" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Cm stalin say about chozha and dravidian