"அம்ரூத் 2.0" மூலம் புவியியல் தகவல் கட்டுப்பாட்டு நிலையம்.. ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...!!
CM Stalin order to allocate fund for Geographic Information Control Center through Amruth 2.0
தமிழ்நாடு முதலமைச்சர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்க துறையின் சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலக செலவு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை செயலகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க ரூ.17.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் அனைத்து கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் முன்னேற்றத்தை மேன்மை செய்வதற்காக அம்ருத் 2.0 திட்டத்தின் நிர்வாகம் மற்றும் அலுவலக செலவு திட்டத்தின் கீழ் சிந்தாரிப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க ரூ.17.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசாணை வெளியீட்டு உள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டமைப்பில் தகவல்கள் உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்கள் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் சேர்க்கப்படும் இவ்வாறு சேர்க்கப்பட்ட தகவல்களைக் கொண்டு பணிகளை திட்டமிடல், பொது சேவை வசதி அன்றாட தகவல்களை மேம்படுத்த இயலும். இத்திட்டத்தின் செயலாக்கம் வாரியத்தின் வருவாய் மேம்படுத்தவும் செலவினங்களை குறைக்கவும் ஏதுவாக அமையும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
CM Stalin order to allocate fund for Geographic Information Control Center through Amruth 2.0