ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு... முதலமைச்சர் அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 35 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, அர்ச்சனா பட்நாயக், பணீந்திர ரெட்டி ஆகியோர் ஒடிசாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இதனிடையே இன்று சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM stalin announced 5 lakh compensation to Tamil families of killed in Odisha train accident


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->