#BREAKING || ஜூன் 5ல் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று தமிழகம் திரும்புகிறார். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு அமைப்பினர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து வரும் ஜூன் 5ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இதற்காக புதுக்கோட்டை செல்லும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக குறுவை சாகுபடி மேற்கொள்ள ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். 

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 9 நாள் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வழியாக இன்று இரவு 10:30 மணி அளவில் சென்னை திரும்பும் அவர் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் வரும் ஜூன் 11ஆம் தேதி மேட்டூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறுநாள் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin inspect Delta districts on June 5


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->