சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்... - ராதாகிருஷ்ணன் உறுதி.! - Seithipunal
Seithipunal


சென்னை, ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் வளர்க்கும் இரண்டு நாய்கள் உடன் பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரு நாய்களும் கடித்துள்ளன. 

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குழந்தையை நாய்கள் கடித்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணைய ராதாகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது, 

நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு தடை செய்துள்ள 23 நாய்களில் ராட்வீலர் வகையும் ஒன்று. புகழேந்தி எந்த ஒரு உரிமமும் இல்லாமல் இந்த வகை நாயை வளர்த்துள்ளார். 

நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். 

நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போட்டு இருக்க வேண்டும். இவர் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவு அனைத்தும் மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dogs bitten Girl medical expenses accept chennai Corporation 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->