2 நாட்கள் ரோடு ஷோ - திருச்சிக்கு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் வருகையாக வருகிற 8ம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது திருச்சியில் இரண்டு நாட்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி 8ம் தேதி மாலை திருச்சி தில்லைநகர்- தென்னூர் சந்திப்பு சாலையில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை சுமார் 2 கி.மீ தொலைவுக்கு பொதுமக்களை சந்தித்தபடி நடந்தே செல்கிறார்.

மறுநாள் 9ம் தேதி காலை, கிராப்பட்டி போலீஸ் பட்டாலியன் மைதானம் அருகில் இருந்து கிராப்பட்டி, எடமலைப் பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் பசுமைப் பூங்கா வரை சுமார் 3 கி.மீ தொலைவுக்கு திறந்த வாகனத்தில் சென்றபடி ரோடு ஷோ நடத்த இருக்கிறார்.

முதல்வரின் ரோடு ஷோ நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin come in trichy for road show


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->