"உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க உறுதியேற்போம்": காவலர் நாளையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


காவலர் நாளையொட்டி, குற்றங்களைத் தடுத்துச் சட்டம்-ஒழுங்கைப் பேணுவதிலும், பேரிடர் மற்றும் ஆபத்தான காலங்களில் துணிவுடன் நின்று மக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதிலும் சிறப்பாகச் செயலாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவலர்களின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கது என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைப்பதற்கும், நவீனத் தொழில்நுட்ப வசதிகள் மூலம் அவர்களின் பணித்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும் அரசு முதன்மை முக்கியத்துவம் அளிக்கும் என உறுதியளித்துள்ள முதலமைச்சர், காவலர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து நலத்திட்டங்களும் தங்குதடையின்றி கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Joseph Vijay Greets Police Force on Police Day Pledges Modernization and Workload Reduction


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->