கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் - போக்குவரத்து துறை விளக்கம்! - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என தெரிவித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

மேலும் திருச்சி மார்க்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பேருந்துகள் கிளாம்பாக்கம் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என போக்குவரத்து துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் மட்டுமே பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

வழக்கமாக திருச்சிக்கு இயக்கப்படும் 105 பேருந்துகளுடன் விடுமுறை காரணமாக கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட்டன. 

தற்போது போக்குவரத்து சீரான நிலையில் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது எனவும் போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clambakkam Passenger blockade Transport Department explanation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->