பயணிகளுக்கு குட் நியூஸ்... கிளாம்பாக்கத்தில் மலிவு விலை உணவகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்!
Clambakkam Bus Stand restaurant issue
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என பொதுமக்கள் விமர்சனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்கீடு ஏற்பாடு செய்யப்படும்.
வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்.
ஏ.டி.எம் மையங்கள் அமைப்பதற்காகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையம் திறந்து 35 நாட்களுக்குள் 90% அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Clambakkam Bus Stand restaurant issue