கிறிஸ்மஸ் பண்டிகை : சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்.!
Christmas special train in thambaram to nagarkovil
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அந்த வகையில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் செல்கிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Christmas special train in thambaram to nagarkovil