சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்...! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரெயில் அறிவிப்பு...!
Chitra Pournami Special Villupuram Tiruvannamalai special train announcement Girivalam Tiruvannamalai
புனிதமான சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலத்திற்கு பெருமளவில் பக்தர்கள் திரளுவர் என்பதைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரெயில்வே சார்பில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், விழுப்புரத்தில் இருந்து ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், காலை 11.45 மணியளவில் திருவண்ணாமலையை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், திருவண்ணாமலையிலிருந்து அதே தேதிகளில் மதியம் 12.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மதியம் 1.45 மணிக்கு விழுப்புரத்தை அடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரவு நேர சேவையாக, விழுப்புரத்திலிருந்து ஏப்ரல் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில், இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.மறுமார்க்கமாக, திருவண்ணாமலையிலிருந்து மே 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணிக்கு புறப்படும் மெமு ரெயில், அதிகாலை 4 மணியளவில் விழுப்புரத்தை அடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறப்பு ரெயில்கள் வெங்கடேசபுரம்,திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பலம், மாம்பலப்பட்டு, அயந்தூர், தண்டரை உள்ளிட்ட இடைநிலையங்களில் நின்று பயணிகளுக்கு சேவை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chitra Pournami Special Villupuram Tiruvannamalai special train announcement Girivalam Tiruvannamalai