அ.தி.மு.க ஆட்சியின் 'சாதனை' இதுதான்: முதலமைச்சர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தர்மபுரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ. 560 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார் .

இதனை  தொடர்நயது தர்மபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, தமிழ்நாட்டு மகளிர் முன்னேற்றத்தில் தர்மபுரிக்கு முக்கியத்துவம் உண்டு. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை இயற்றியவர் கலைஞர். 

பொருளாதார அதிகாரம் உள்ளவர்களாக பெண்களை மாற்றி இருக்கிறோம். திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்றால் நாள் முழுவதும் பேச வேண்டும். 

விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மகளிர் மாதம் தோறும் ரூ. 888 சேமிக்கின்றனர். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளில் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அ.தி.மு.க ஆட்சியின் சாதனை.

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 16 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். மகளிர் உரிமை திட்டம் மூலம் 1.15 கோடி பெண்கள் பயன்பெறுகின்றனர். 

இந்த திட்டத்தின் பயன்கள் முறையாகச் சென்று சேர்கிறதா என்பதை அறிய 'நீங்கள் நலமா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் விதமாக பார்த்து பார்த்து திட்டம் தீட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister Stalin speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->