ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10 பதவி ஏற்பார் - பிரதமர் மோடி உறுதி!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டதேர்தல் வரும் மே-13 அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் ஜூன்-1 தேதியும் நடைபெற உள்ளது. அதனால், அனைத்து அரசியல் இயக்கத்தின் தலைவர்களும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஒடிஸா மாநிலம் பெஹ்ராம்பூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடந்து கொண்டார். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசுகையில், இரண்டு மாற்றங்கள் நடைபெற உள்ளது. ஒன்று நாட்டில் சக்தி வாய்ந்த அரசு அமைய இருக்கிறது. இரண்டாவது ஒடிஸாவில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.

காங்கிரசும் பிஜூ ஜனதா தளமும் கொள்ளையடித்ததுதான் ஒடிஸா மக்களின் அவலநிலைக்கு காரணம். பிஜூ ஜனதா தள நிர்வாகிகள் அனைவரும் பணக்காரர்களாக உள்ளனர். பிஜூ ஜனதா தள அரசு காலாவதி ஆகும் நாள் ஜூன் 4 . அன்றைய தினமே பாஜகவின் முதலமைச்சர் யாரென்று அறிவிக்கப்பட்டு ஜூன் 10ந் தேதி பதவியேற்பார் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha BJP Chief Minister to take charge on June 10 PM Modi confirms


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->