முதலமைச்சர் தலைமையில் மண்டல ஆய்வுக் கூட்டம் -  நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வேலூர் சென்றார். 

அங்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் வேலூரில் ஆலோசனை நடத்தினார். 

அதன் பின்னர், சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். 

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister stalin meeting to four district collecters in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->