'Eco பூங்காவாக மாறிய பெருங்குடி குப்பைக் கிடங்கு'; சென்னை மாநகராட்சியை பாராட்டிய ஆனந்த் மஹிந்திராவுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெருங்குடி குப்பைக் கிடங்கு, 'பயோ-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த நிலம் தற்போது Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைப் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டி, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் தற்போது மரங்கள் மற்றும் நடைபாதைகள் கொண்ட அழகிய பூங்காவாக உருமாறியுள்ளது. இதைச் சாதித்துக் காட்டிய சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள். இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த பாராட்டு பதிவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா... சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பழமையான குப்பைகளில் இருந்து, பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.

மீதமுள்ள குப்பைகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதிலும், திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin has thanked Anand Mahindra for praising the Chennai Corporation


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->