பாஜக ஊழல் செய்வதாக துணை முதல்வர் பகீர் தகவல்; 'அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார்' என முதல்வர் பட்நாவிஸ் பதில்..!
Maharashtra Chief Minister Fadnavis criticized Ajit Pawar saying he is wasting time with mere talk
மஹாராஷ்டிராவில் ஜனவரி 15 ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் காட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவை ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக - அஜித் பவார் தலைமையிலான என்சிபி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, மாநிலத்தை ஆளும் கூட்டணியில் ஒன்றாக இருந்தாலும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஓரணியாகவும் மற்றும் அஜித் பவாரின் என்சிபி, இந்தியா கூட்டணியில் உள்ள சரத் பாவர் என்சிபியுடன் கூட்டணி வைத்து எதிராணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்த சூழலில், தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அம்மாநில பட்நாவிஸ் பேசுகையில், "தேர்தல் நேரத்தில் மட்டுமே சில தலைவர்களின் குரல் உயர்கிறது. அஜித் தாதா வெறும் பேச்சிலேயே நேரத்தை வீணடிக்கிறார், ஆனால், நான் களத்தில் வேலை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

முதல்வரின் இந்த கருத்துக்குப் அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பதிலளித்துள்ளதாவது: "நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை, அரசின் தோல்விகளை மட்டுமே சுட்டிக் காட்டுகிறேன். சின்ச்வாட் மாநகராட்சியில் பாஜக செய்த ஊழல்கள் மற்றும் தவறுகளைச் சொல்வது விமர்சனம் ஆகாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாஜக ஆட்சியில் பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாலம் திட்டத்தைச் செலவு கணக்கில் ஏழு கோடி ரூபாயாக உயர்த்தியது உள்ளிட்ட பல முறைகேடுகளை அஜித் பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு மாநிலத்தின் துணை முதல்வர், முதல்வரின் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
English Summary
Maharashtra Chief Minister Fadnavis criticized Ajit Pawar saying he is wasting time with mere talk