"உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம்  - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்காக வைத்துள்ளார். இதற்காக அவர் தொகுதி வாரியாக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு "உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது.

இதுவரைக்கும் 45 தொகுதிகளில் தி.மு.க.வின் கள நிலவரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து முடித்துள்ளார். இதற்காக ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளை வரவழைத்து தொகுதிகளின் நிலவரம், மக்கள் மனநிலை, தி.மு.க.வுக்கு இருக்கும் செல்வாக்கு, தொகுதியில் உள்ள குறைகள் போன்றவற்றை கேட்டு அறிகிறார். அதன் பின்னர் தி.மு.க. நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று ஆரணி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆரணி தொகுதி கள நிலவரங்களை கேட்டு அறிந்தார். மேலும், ஆரணியில் தேர்தல் பணிகளை உற்சாகமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin meeting to arani constituency excuetives


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->