அறந்தாங்கியில் அதிரடி ஆபர்.! பழைய நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி கொடுத்து அசத்திய சம்பவம்.!
chicken biryani for old coins in arantangi biryani shop
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் ஒரு ஓட்டலில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் உணவு பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
தற்போது உலகில் மக்கள் அனைவரும் விரும்பும் உணவுகளில் ஒன்று பிரியாணி. இந்த உணவு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்தவகையில் இந்தியாவில் மட்டும் மொத்தம் 20 வகையான பிரியாணி உண்டு.
அவற்றில் எட்டு வகை பிரியாணி, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அதில், மக்கள் அதிகம் விரும்பும் பிரியாணியாக சிக்கன் பிரயாணி உள்ளது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அறந்தாங்கியில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு அசைவ உணவகத்தில், தங்கள் கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு 5, 10 மற்றும் 20 பைசா நாணயங்களை கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கன் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை கேட்டு, அதிர்ச்சி அடைந்த அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வாங்கி சென்றனர்.
English Summary
chicken biryani for old coins in arantangi biryani shop