ஓடிடி தளத்தை தணிக்கை செய்ய கோரிய வழக்கு.!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பொழுதுபோக்கு தங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நெட்பிஃளிக்‌ஸ், அமேசான் பிரைம், டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், சோனி லைவ், ஜியோ சினிமா போன்ற சந்தா அடிப்படையிலான ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்கள், திரைப்படங்களை வெளியிடுகின்றன.

திரையரங்குகளில் திரையிடப்படும் படங்களை கண்காணிக்க மற்றும் கட்டுபடுத்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் தொடர் உள்ளிட்டவை தணிக்கை செய்யப்படுவது இல்லை. பிற மொழிகளில் இருந்து மொழி பெயர்ப்பு செய்யப்படும் வசனங்களிலும் அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்டால் குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். எந்த தணிக்கையும் செய்யாமல் சந்தா செலுத்தும் நபர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள், வங்கி விவரங்களை இழக்கவும் நேரிடலாம்.

மேலும் தற்பொழுது ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதால் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடும் வழிகாட்டுதல்கள் முறை தேவை. ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்களை தணிக்கை செய்யக் கோரி கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு மனு அளித்தேன்.

அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்றவி சாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளன என நேரடியாக கூறாமல், மனுதாரரின் கோரிக்கைகள் பொதுப்படையாக உள்ளன.

இது தொடர்பாக மனுதாரர் ஏற்கனவே அளித்த மனு பரீசீலிக்கபட்டுள்ள நிலையில், குறைகள் இருந்தால் சம்பந்தபட்ட சட்ட அமைப்பிடம் புகார் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC verdict OTT sites censorship case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->