என்எல்சி முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது நீதிமன்றம் திட்டவட்டம்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கை வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் முன்பு தொடர்ந்து 8 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், என்எல்சி நிறுவனத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களுக்கும் என்எல்சி நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொழிற்சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 8 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாக வாதித்தார்.

அதற்கு என்எல்சி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு இடங்கள் இருக்கும்பொழுது கார்ப்பரேட் அலுவலகம் முன்பு மட்டும் போராட்டம் நடத்துவது என்பது ஏற்க முடியாது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அனுமதிக்காத இடத்தில் போராட்டம் நடத்துவது ஏற்படுகிறது அல்ல.

அதுவும் என்எல்சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தது தெரிவித்ததோடு போராட்டம் நடத்தும் இடங்களை கண்டறியும் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கில் விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதேபோன்று என்எல்சி நிறுவனத்திற்கும் ஒப்பந்த தொழிலாளருக்கும் இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது குறித்து அன்றைய தினம் விவாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC said that protest cannot be allowed in front of NLC corporate office


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->