ஜி.வி பிரகாஷ் தொடர்ந்த ஜிஎஸ்டி வழக்கு.. உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!
ChennaiHC orders Income Tax dept to respond in GVPrakash GST case
இசை படைப்புகளுக்கு ரூ.1.84 கோடி ரூபாய் வரி செலுத்தும் படி பிரபல இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாருக்கு ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்த தனிநபரி 4 வாரங்களில் நோட்டீஸிற்கு பதில் அளிக்குமாறு ஜி.வி பிரகாசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஜிவி பிரகாஷ் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் "இசை படைப்புகளின் காப்புரிமை பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். எனவே தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோரின் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 வாரங்களில் வருமானவரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
English Summary
ChennaiHC orders Income Tax dept to respond in GVPrakash GST case