முருகனை முகாமில் இருந்து விடுவிக்க கோரிய வழக்கு.!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முருகனை திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடனும், தனது மகளுடனும் வாழ அனுமதிக்க வேண்டும் என முருகனின் மனைவி நளினி மத்திய அரசுக்கு மனு அளித்திருந்தார்.

ஆனால் மத்திய அரசு முருகனின் மனைவி நளினி அளித்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் முருகனின் மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் அளித்த மனுவின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "லண்டனில் வசிக்கக்கூடிய தனது மகளுடன் சேர்ந்து வசிக்க தனது கணவர் முருகன் விரும்புகிறார். இதனால் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக இலங்கை தூதரகத்தை அணுக வேண்டும். இதற்காக அவர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் இருந்து வெளியே வர முடியவில்லை. 

மேலும் எனது கணவர் முருகன் என்னுடன் வாழ அனுமதிக்க வேண்டும். வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர் நிபந்தனைகளுடன் உறவினர்களுடன் தங்க அரசு அனுமதித்துள்ளது" என தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது நளினி தாக்கல் செய்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கில் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC directs central and state govts to respond to release Murugan from special camp


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->