தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு தகவல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, இழப்பீடு வழங்கியது என தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை முடித்து வைத்திருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அப்போது தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை நகல் தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் புகார் அளித்த தனக்கு கருத்து தெரிவிக்க எந்த சந்தர்ப்பமும் வழங்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி புகார் அளித்தவரின் தரப்பை கேட்காமல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை முடித்து வைத்தது எப்படி? என கேள்வி எழுப்பியதோடு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC barrage questions in Tuticorin sterlite shooting case


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->