சென்னை–வேலூர் தேசிய நெடுஞ்சாலை! ரூ.1500 கோடி செலவிட்டும் 13 ஆண்டுகளாக வேலை முடிக்காத அவலம்!தற்போதைய நிலை என்ன?
Chennai Vellore National Highway Despite spending Rs1500 crore the work has not been completed for 13 years What is the current status
சென்னை-வேலூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48, தமிழகத்தின் முக்கிய போக்குவரத்து நரம்பு. இந்த 100 கி.மீ. நீளப்பாதையை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்த 13 ஆண்டுகளுக்கு முன் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பணிகள் பாதியிலேயே நின்று போயுள்ளதால், இந்தச் சாலை “மரணச் சாலை” என்ற பெயரைப் பெற்றுள்ளது.
மதுரவாயல் முதல் வாலாஜா வரை நீளும் இந்தப் பாதையில்,பணிகள் பாதியிலேயே நிற்கும் மேம்பாலங்கள்.கைவிடப்பட்ட தூண்கள்.சர்வீஸ் ரோடாக பயன்படுத்தப்படும் முடிக்காத பாலங்கள்.குண்டும் குழியுமாக மாறிய புதிய டார்சாலைகள் என பயணிகளின் உயிருக்கும் வாகனங்களுக்கும் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.
பணிகள் தாமதமாக காரணமாக,2016ல் முதல் ஒப்பந்ததாரர் நீக்கப்பட்டார்.2021ல் ப்ளை-ஆஷ் பிரச்சனையால் இரண்டாம் ஒப்பந்ததாரர் விலகினார்.தற்போது பணிகள் மூன்றாம் கட்டத்திலும் நின்று போயுள்ளனரூ.1500 கோடியும், 12க்கும் மேற்பட்ட ஆண்டுகளும் கடந்தும், நிலைமை மோசம்தான்.
பொதுமக்கள் கடும் அதிருப்தியுடன்,“10 வருடங்களில் ரூ.1000 கோடிக்கு மேல் சுங்கம் வசூலித்திருக்கிறார்கள். ஆனாலும் சாலை ஒரு கிலோமீட்டரும் சரியாக இல்லை. எங்களது உயிரா பணமா?”
என்று கேள்வி எழுப்புகின்றனர்.
வாலாஜா அருகே முற்றிலும் முடியாத மேம்பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவது மிகப்பெரிய சிக்கல்.கம்பிகள் முழுவதும் வெளிப்படையாக உள்ளன.தடுப்புகள் கிடையாது.கட்டுமான தளத்தைப் போன்ற நிலையில் வாகனங்கள் ஓடுகின்றனவிபத்துகள் தவிர்க்க முடியாத நிலை என்றே உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
சுங்குவார்சத்திரம், நந்திமேடு, முருக்கந்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் கட்டுமான மணல், சிமெண்ட் தூசி காரணமாக மூச்சுத்திணறல், குறைந்த காட்சி தொலைவு போன்ற பிரச்சனைகள் அதிகம்.
பூந்தமல்லி–ஸ்ரீபெரும்புதூர் இடையே புதியதாகப் போடப்பட்ட 10 கி.மீ. சாலை கூட சில மாதங்களில் குண்டும் குழியுமாகி இருப்பது மக்களை அதிரவைத்துள்ளது.
இந்த தாமதத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மாநிலத்தை குற்றம் சொல்கிறது.மாநில அரசு ஒப்பந்ததாரர்களை குற்றம் சொல்கிறது.ஒப்பந்ததாரர்கள் ப்ளை-ஆஷ், அனுமதி பிரச்சனைகள் என காரணம் சொல்கின்றனர்ஆனால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்.
இது சாதாரண சாலை அல்ல— சென்னை துறைமுகத்திலிருந்து பெங்களூருக்கு செல்லும் சரக்கு போக்குவரத்தின் பிரதான பாதை, ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணிக்கும் சாலை,மருத்துவ அவசர சேவைகளும் இந்த பாதையை நம்புகின்றன
இதனால் உடனடியாக பராமரிப்பு மற்றும் அவசர சீரமைப்பு அவசியம் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
13 ஆண்டுகள், ரூ.1500 கோடி செலவினம்... ஆனாலும் மக்கள் உயிரை ஆபத்துக்குள் தள்ளும் இந்தச் சாலை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியத்தின் நேரடி சான்று என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Chennai Vellore National Highway Despite spending Rs1500 crore the work has not been completed for 13 years What is the current status