சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


விருப்பம் போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையின் கால அவகாசம் நீட்டித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, ஒவ்வொரு மாதமும்‌ விரும்பம்போல்‌ பயணம்‌ செய்யும்‌ மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000/-), 29 மையங்களில்‌ (7-ம்‌ தேதி முதல்‌ 22-ம்‌ தேதி வரையில்‌) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறிப்பாக, தகவல்‌ தொழில்நுட்பம்‌ உள்ளிட்ட தனியார்‌ நிறுவனங்களில்‌ பணிபுரிகின்ற அனைவரிடமும்‌ நல்ல வரவேற்பினைப்‌ பெற்றுள்ளது. 

நோய்த்‌ தொற்று இல்லாத காலங்களில்‌, ஒவ்வொரு மாதமும்‌ ஏறத்தாழ 1.40 இலட்சம்‌ பயண அட்டைகள்‌ விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா நோய்த்‌ தொற்றின்‌ காரணமாக, கடந்த 10.05.2021 முதல்‌ 20.06.2021 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பேருந்துகள்‌ இயக்கப்படாமல்‌ இருந்தது. தற்போது, நோய்த்‌ தொற்று பெருமளவு குறைக்கப்பட்டு, பேருந்துகளை இயக்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளதன்‌ அடிப்படையில்‌,
கடந்த 21.06.2021 முதல்‌ பேருந்துகள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ திரு.ஆர்‌.எஸ்‌.ராஜகண்ணப்பன்‌ அவர்கள்‌, கடந்த 21.06.2021 அன்று மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மத்தியப்‌ பணிமனையில்‌ ஆய்வு மேற்கொண்டு, பின்‌ செய்தியாளர்‌ சந்திப்பில்‌, கடந்த மாதம்‌ (16.05.2021 முதல்‌ 15.06.2021 வரை) பயணம்‌ செய்திட வழங்கப்பட்டுள்ள, விரும்பம்போல்‌ பயணம்‌ செய்யும்‌ மாதாந்திர சலுகை பயண அட்டையினை, வரும்‌ ஜுலை மாதம்‌ (15.07.2021 வரையில்‌) பயன்படுத்திக்கொள்ள அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்‌. 

மேலும்‌, இந்த மாதம்‌ வழங்கப்படும்‌ பயண அட்டையின்‌, கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிடுமாறு பல்வேறு தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளை ஏற்று, வரும்‌ 26.06.2021 வரையில்‌, வழங்கிட அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்கள்‌.
அதனடிப்படையில்‌, வரும்‌ 26.06.2021 வரை மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக, 29 மையங்களில்‌, இந்த பயண அட்டையினை பொதுமக்கள்‌ பெற்றுக்கொண்டு, வரும்‌ 15.07.2021 வரை பயனாம்‌ செய்யலாம்‌.

மேலும்‌, மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ சார்பில்‌, ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு மாத அடிப்படையில்‌ பயணம்‌ செய்திட, மாதாந்திர பயண சலுகைச்‌ சீட்டு (1ம்‌ தேதி முதல்‌ 22ம்‌ தேதி வரையில்‌) விற்பனை
செய்யப்பட்டு வருகிறது. இந்த பயண சீட்டும்‌, மாதம்‌ ஒன்றுக்கு அதிகப்பட்சமாக, 40 ஆயிரம்‌ அளவில்‌ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம்‌ (16.05.2021 முதல்‌ 15.06.2021 வரையில்‌) பயணம்‌ செய்திட வழங்கப்பட்டுள்ள மாதாந்திர பபண சலுகைச்‌ சீட்டினை, வரும்‌ ஜுலை மாதம்‌ ((5.07.2021 வரையில்‌) பயன்படுத்தி பயணம்‌ செய்திட அனுமதித்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. பேற்கண்ட தகவலை மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ திரு.அ.அன்பு ஆபிரகாம்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai transport corporation new announcement


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal