#சென்னை || வாகன ஓட்டிகளை மகிழ்வித்த போலீசார்.! மகிழ்ச்சி, பாராட்டு, அபராதம், வழக்கு.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வருபவரும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இன்று முதல் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து 312 இடங்களில் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகைகள் சென்னை புதிய வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வருகிறார்களா? என்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வரும் ஹெல்மெட் அணிவதை பார்த்த காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்களுக்கு டைரி மில்க் சாக்லெட் வழங்கி தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

'உங்களைப் போலவே மற்ற வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று அந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

வாகன ஓட்டிகளும் நாம் முறையாக விதியை பயன்படுத்தி வருவதற்கு போலீசார் பாராட்டு தெரிவித்து, இனிப்பு வழங்கியது எண்ணி மனம் குளிர மகிழ்ச்சியாக தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

அதே சமயத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, அவர்களுக்கு அபராதம் விதித்தும், அவர்கள் மீது வழக்குப் பதிந்து போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai traffic police new vannarpat


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->