மழையில் முளைக்கும் அழகு… உணவில் சேர்ந்தால் உயிர்க்கு ஆபத்து...! - விஷக் காளான்கள் குறித்து எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மழைக்காலம் தொடங்கியவுடன், பசுமை போர்த்திய நிலங்களிலும் சாலையோரங்களிலும் திடீரென குடை விரித்தது போல் காளான்கள் முளைப்பதை நாம் அடிக்கடி காணலாம். மென்மையான வடிவம், கண்களை ஈர்க்கும் அழகிய தோற்றம் ஆகியவற்றால் அவை பார்க்கவே மனதை கவரும்.

ஆனால், இந்த அழகின் பின்னால் உயிர்க்குப் பேராபத்து மறைந்திருக்கலாம் என்பதே அதிர்ச்சியளிக்கும் உண்மை.இயற்கையில் முளைக்கும் காளான்களில் பெரும்பாலானவை விஷத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

மேலும், உண்ணத் தகுந்த காளான்களைப் போலவே தோற்றமளிப்பதால், அவற்றை சரியாக அடையாளம் காண்பது மிகுந்த சிரமம். சில சமயங்களில் தாவரவியல் நிபுணர்களுக்கே உண்ணக்கூடிய காளான்களையும் விஷக் காளான்களையும் வேறுபடுத்த முடியாமல் போகும் அளவிற்கு அவை ஒத்திருக்கின்றன.

அதனால், காட்டுப்பகுதிகளில் அல்லது தானாக முளைக்கும் எந்தக் காளானையும் உண்பது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. விஷக் காளான்களுக்கு சில பொதுவான அடையாளங்கள் உள்ளன. அவற்றின் குடை போன்ற மேற்பகுதியில் செதில்கள் காணப்படலாம். தண்டு பகுதியில் வளையம் அல்லது அடிப்பகுதியில் குமிழ் போன்ற அமைப்பு இருக்கும்.

மேலும், இவை அதிகமாக கவர்ச்சியான நிறங்களுடன் காணப்படுவதோடு, சில நேரங்களில் அருவருப்பான துர்நாற்றத்தையும் வீசும்.நச்சுத்தன்மையின் அடிப்படையில் விஷக் காளான்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அமானிடா பாலோய்ட்ஸ், கோனோசைப் பிலாரிஸ், அமானிடா ஜெம்மாட்டா, அமானிடா பேன்தரீனா, சைலோசைப் சயனாசீன்ஸ், ஜிரோமிட்ரா எஸ்குலண்டா போன்றவை மிகவும் ஆபத்தான விஷக் காளான்களாக தாவரவியல் உலகில் குறிப்பிடப்படுகின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய விஷக் காளான்கள் பரவலாக காணப்படுகின்றன.அதே நேரத்தில், பாதுகாப்பாக உண்பதற்கு ஏற்ற காளான்களும் உள்ளன. உண்ணத் தகுந்த காளான்களில் பட்டன் காளான் முதலிடம் வகிக்கிறது.

வெள்ளை அல்லது கிரீம் நிறத்தில் மென்மையாக இருக்கும் இது சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் சாம்பல், வெள்ளை, பழுப்பு நிறங்களில் காணப்படும் சிப்பி காளான் சுவைமிக்கதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதைத் தவிர ஷிடேக், எனோகி, மோரல் போன்ற காளான்களும் பாதுகாப்பான உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில், காளான்கள் அழகாக தோன்றினாலும், அறிவில்லாமல் அவற்றைத் தேர்வு செய்வது உயிரையே கேள்விக்குறியாக மாற்றிவிடும். ஆகவே, உறுதி செய்யப்பட்ட, பயிரிடப்பட்ட காளான்களை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்வதே பாதுகாப்பான வழி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beauty that sprouts rain but if consumed dangerous life warning about poisonous mushrooms


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->