அட்ரஸ் கேட்டு.. தங்க டாலரை அபேஸ் செய்த புள்ளிங்கோ.. 2 சிறுவர்கள் கைது.!
Chennai otteri pullingo arrested by police
அட்ரஸ் கேட்பதைப் போல நடித்து திருடர்கள் தங்க டாலரை பறித்து சென்ற சம்பவம் சென்னையில் உள்ளது.
சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு நபர் நடந்து சென்ற போது தனது தங்க டாலரை பறிக் கொடுத்துள்ளார். இந்த கொடூர செயலில் இரண்டு சிறுவர்கள் ஈடுபட்ட நிலையில் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பவன் குமார் என்ற நபர் சென்னை ஓட்டேரி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது இரண்டு சிறுவர்கள் அவரை கடந்து சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று கிராம் தங்க டாலரை கயிறுடன் அறுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் விரட்டென பறந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பவன் குமார் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசார் 2 சிறுவர்களை கைது செய்து அவர்கள் திருட்டு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
Chennai otteri pullingo arrested by police