இணையத்தில் விளம்பரம்.. சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.. அதிர்ச்சியாகும் காவல்துறை.!!
Chennai Online Prostitution
தமிழகத்தின் தலைநகரான சென்னை பல விஷயங்களுக்கு உதவி செய்து வருகிறது. ஒருகாலகட்டங்களில் பிழைப்பை தேடி வந்தவர்கள் எல்லோருக்கும், வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று பல அடையாளங்களை தன்னகத்தே வைத்துள்ளது.
இன்று பணிக்காக வரும் நபர்களும், சுற்றுலாவிற்காக வரும் நபர்களும் ஏராளம். இந்த நிலையில், சென்னையில் விபசாரம் கொடிகட்டி பறந்து வருகிறது. முந்தையை காலங்களில் விபசாரங்கள் மக்கள் மிகுந்த இடங்களில் பாலியல் தொழிலாளர்களை நிற்கவைத்தோ அல்லது புரோக்கர் மூலமாகவோ நடைபெற்று வந்தது.

இன்றளவில் நடைபெறும் விபசாரம் என்பது தொழில்நுற்பத்திற்கு ஏற்றாற்போல இணையத்தளம் வாயிலாக மாறிவிட்டது. இணையத்தில் தேடினால் கிடைக்காதது ஏதும் கிடைக்காமல் போனதில்லை என்பதை போல, குறித்த தகவலை வைத்து தேடினால் பல புதுப்புது தகவல்கள் கிடைக்கிறது.
இதன்படி, அதில் விபரமாகவே எந்தெந்த வகையிலான பெண்கள் பாலியல் தொழிலார்களாக இருக்கின்றனர் என்பதை பகிர்ந்து, அலைபேசி எண்ணும் இருக்கிறது. இதற்கு தொடர்பு கொண்டு பேசினால், மறுமுனையில் பேசும் நபர் நான்கே வார்த்தையில் விபரத்தை கேட்டறிந்து அழைப்பை துண்டித்துவிடுகிறார். மேலும், அதிகநேரம் எடுத்துக்கொண்டால் காவல்துறை இருவரின் இருப்பிடத்தையும் அறிந்துகொள்வார்கள் என்ற பயமும் இருக்கிறது.

கடந்த சில வாரத்திற்கு முன்னதாக கூட சென்னை காவல் துறையினரால் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கும்பல் கைது செய்யப்பட்டனர். இதனைப்போன்று பல கும்பல்கள் இன்றளவு செயல்பட்டு வருகிறது. இவர்களில் குடும்ப சூழ்நிலைக்காக பாலியல் தொழிலாளர்களாக மாறும் பெண்களும், பெண்களை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துவதும் தொடர்ந்து வருகிறது.

இணையத்தளத்தில் உள்ள இதுபோன்ற தகவலை காவல்துறையினர் கண்காணித்து சைபர் கிரைம் உதவியுடன் தொடர்ந்து நீக்காவிடில் பல எதிர்கால பிரச்சனை அனைவருக்கும் ஏற்படும் என்பதே நிதர்சனம். மேலும், காவல்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், நாங்கள் என்னதான் ஒரு இணைய பக்கத்தை தடை செய்தாலும், புதுப்புது இணையங்கள் மூலமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறுகின்றனர். எங்களால் இயன்ற பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai Online Prostitution