சென்னை மெட்ரோ கட்டம்-2: சென்னையில் சம்பவம் செய்த "குறிஞ்சி".. சிட்டிக்கு உள்ளே 118.9 கிமீ நீளத்திற்கு நடக்கும்.. செம மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 5-இல் பயன்படுத்தப்பட்ட ‘குறிஞ்சி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கத் தோண்டும் இயந்திரம் (TBM) தனது பணியை வெற்றிகரமாக முடித்து இன்று கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனம் சார்பில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ பாதை அமைக்கும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிக்காக 15.5 கிலோமீட்டர் நீளத்தில் மெட்ரோ இணைப்பு மட்டுமல்லாமல், ஜிஎஸ்டி சாலையில் இரண்டு அடுக்கு பாலமும் அமைக்கப்பட உள்ளது. இதில், முதல் அடுக்கில் வாகன போக்குவரத்து, இரண்டாம் அடுக்கில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டம்-2 வழித்தடம் 5, மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூரை எட்டும். மொத்தம் 47 கி.மீ நீளத்தில், 5.8 கி.மீ. சுரங்கப்பாதையும், 39 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. இந்த சுரங்கப்பாதைக்கான பணிகளில் ‘குறிஞ்சி’, ‘முல்லை’, ‘மருதம்’, ‘நெய்தல்’ என நான்கு சுரங்கத் தோண்டும் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

தொடர்புடைய பிரிவில், 246 மீட்டர் நீளத்திலான சுரங்கப்பாதை பணியை குறிஞ்சி இயந்திரம் 20 பிப்ரவரி 2025 அன்று தொடங்கி, இன்று (21 ஆகஸ்ட் 2025) கொளத்தூர் நிலையம் வரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மிகக் குறைந்த நிலஅடுக்கு, 3.8% கடின சாய்வு, அதிக போக்குவரத்து கொண்ட உள்வட்டச் சாலையின் நடுப்பகுதியில் தரைப் பாதுகாப்பு போன்ற சவால்களை சமாளித்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இந்தப் பணி நிறைவேற்றப்பட்டது.

இந்த சாதனையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், இணை பொது மேலாளர் எம். கார்த்திகேயன், Tata Projects நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கே. ரமேஷ், பொது ஆலோசகர் குழுத் தலைவர் இயன் வாட்சன், தலைமை பொறியாளர் உஸ்மான் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Metro Phase 2 Kurinji who caused the incident in Chennai will run for a length of 118 km within the city A big change


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->