செப். 26 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
Chennai Imd Rain alert
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 21 முதல் 26 வரை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை வரை பரவலான மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (செப்டம்பர் 21) இடி, மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கையாக, செப்டம்பர் 21 முதல் 24 வரை தென்தமிழக மற்றும் வடதமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இந்த காலப்பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.